1,500 ரூபாய் பாக்கி.. கொலையில் முடிந்த கடன் தகராறு


1,500 ரூபாய் பாக்கி.. கொலையில் முடிந்த கடன் தகராறு
x

வினோத்துக்கு கொடுக்க வேண்டிய 1,500 ரூபாய் கடன் பாக்கியை அப்துல்லா கொடுக்காமல் காலம் கடத்தி உள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியின் மடிப்பூர் ஜே.ஜே. காலனியில் வசித்து வந்த வினோத் என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 22ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை பஞ்சாபி பாக் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, அருகில் உள்ள பஸ்சிம் விகார் பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற நபரை நேற்று கைது செய்தனர். விசாரணையில் 1,500 ரூபாய் கடன் தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

வினோத்துக்கு கொடுக்க வேண்டிய 1,500 ரூபாய் கடன் பாக்கியை அப்துல்லா கொடுக்காமல் காலம் கடத்தி உள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கடனை வசூலிப்பதற்காக அப்துல்லாவின் வீட்டுக்கு வினோத் சென்றுள்ளார். அங்கு அப்துல்லா இல்லாததால் கோபமடைந்த அவர், அப்துல்லாவின் குடும்பத்தினரை திட்டிவிட்டு திரும்பிச் சென்றிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட அப்துல்லா, மறுநாள் வினோத்தின் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் பலமுறை குத்திக் கொன்றுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.


Next Story