பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் - அனைத்துக்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு


பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் - அனைத்துக்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தாவில் அவர் கூறுகையில், 'எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி போன்றவற்றை விற்பதன் மூலம் துச்சாதனன் போல நாட்டை பா.ஜனதா அழித்து வருகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வெளியேற்றுவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். துச்சாதனன் பா.ஜனதாவை வெளியேற்றி, நாட்டின் சாதாரண குடிமக்களையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்' என தெரிவித்தார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பா.ஜனதாவுக்கும், நாட்டின் குடிமக்களுக்கும் இடையேயான போராட்டம் என தெரிவித்த மம்தா பானர்ஜி, பா.ஜனதாவை தோற்கடித்து இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைத்து மதத்தினரும் இணைய வேண்டும் என்றும் கூறினார்.


Next Story