மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
மகாராஷ்டிர மாநிலம் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அஜித் பவார் கூறுகையில், மும்பை பிராந்தியத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் முறையே 26 மற்றும் 25 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. இதன் படி, பெட்ரோல் விலை 65 பைசா லிட்டருக்கு குறையும். இந்த விலை குறைப்பு மூலம் மும்பை, நவி மும்பை, தானே பிராந்தியங்களில் வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் தற்போது பாஜக, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.