மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு..!


மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு..!
x

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்து மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மும்பை,

பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.

இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.2.41-ம் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ரூ.1.36-ம் குறைப்பதாக அறிவித்தது. கேரளாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 2.48-ம், டீசல் மீதான வரியை ரூ. 1.16-ம் குறைத்து அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது மராட்டிய மாநில அரசும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய அரசு பெட்ரோல் மீதான வாட் வரியில் 2.08 ரூபாயும் டீசல் மீதான வரியில் 1.44 ரூபாயும் குறைத்துள்ளது.


Next Story