மராட்டியத்தில் அதிகரிக்கும் கால்நடை தோல் தொற்றுநோய் பரவலை தடுக்க மாநில அளவிலான செயற்குழு உருவாக்கம்!


மராட்டியத்தில் அதிகரிக்கும் கால்நடை தோல் தொற்றுநோய் பரவலை தடுக்க மாநில அளவிலான செயற்குழு உருவாக்கம்!
x

மராட்டியத்தில் கால்நடை லம்பி தோல் தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது.

மும்பை,

மராட்டியத்தை கால்நடை லம்பி தோல் தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது.மராட்டிய மாநிலத்தில் அதிகரித்து வரும் கால்நடை தோல் நோயைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான செயற்குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது.

புனேவில் உள்ள கால்நடை பராமரிப்பு ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட செயற்குழு செயல்படும். இது குறித்த அரசின் தீர்மானத்தை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் தோல் நோய் பரவலை தடுக்க அரசு மாநிலம் முழுவதும் இலவசமாக கால்நடைகளுக்கு தடுப்பூசி போட உள்ளது.மராட்டிய மாநிலத்தில் 1.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டியுள்ளது. இதுவரை 1.40 லட்சம் விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 600 கால்நடைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 400 விலங்குகள் குணமடைந்துள்ளன என்று கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.


Next Story