ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 5.8 அளவில் நிலநடுக்கம் - டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வு


ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 5.8 அளவில் நிலநடுக்கம் - டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வு
x

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறிய மற்றும் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. குறிப்பாக இந்துகுஷ் மலைப்பிரதேசத்தில் அதிக நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த நிலப்பகுதி யுரேஷிய மற்றும் இந்திய டெக்டானிக் தட்டுகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story