தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: மத்திய பிரதேசத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி
காங்கிரஸ், பாஜக என இருமுனை போட்டியாகவே மத்தியப் பிரதேச தேர்தல் பார்க்கப்படுகிறது.
போபால்,
ஐந்து மாநில தேர்தல்கள் அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்டமாக தெலுங்கனானவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நவம்பர் 17 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தமாக 76.22% வாக்குகள் பதிவானது. 75.84% ஆண் வாக்காளர்களும், 74.01% பெண் வாக்காளர்களும் வாக்களித்திருந்தனர்.
மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி (எஸ்.பி), பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜக என இருமுனை போட்டியாகவே மத்தியப் பிரதேச தேர்தல் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 230 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பாஜக 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் 97 முதல் 107 தொகுதிகளில் வெல்லும் எனவும் மற்ற கட்சிகள் 0-2 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி9: பாஜக 100-110, காங்கிரஸ் 90-100, மற்றவை 5-10 இடங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன்கிபாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்,காங்கிரஸ் 102 முதல் 125 தொகுதிகள் வரை வெல்லும் எனவும், பாஜக 100 முதல் 123 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் மற்றவை 0-5 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.