மத்தியபிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்


மத்தியபிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்
x

கோப்புப்படம்

மத்தியபிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தொடங்கிவைத்தார்.

போபால்,

பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா' என்ற திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார்.

இதன்படி, வருமானவரி செலுத்தாதவர்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இதற்கு இம்மாதம் 15-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மே 31-ந் தேதி பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 10-ந் தேதியில் இருந்து அவர்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.


Next Story