மத்திய பிரதேசம்: குவாலியரில் உள்ள பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து


மத்திய பிரதேசம்: குவாலியரில் உள்ள பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து
x

தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பாரா என்ற கிராமத்தில் பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் தீ விபத்தால் சேமிப்புக் கிடங்கில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story