உ.பி-யில் நின்றுகொண்டிருந்த பஸ் மீது சொகுசு பஸ் மோதி 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்


உ.பி-யில் நின்றுகொண்டிருந்த பஸ் மீது சொகுசு பஸ் மோதி 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 July 2022 7:17 PM IST (Updated: 25 July 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

உத்தரப்பிரதேசத்தில் நின்றுகொண்டிருந்த பஸ் மீது சொகுசு பஸ் மோதி 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் ஒரு சொகுசு பஸ் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. நாரயண்பூர் என்ற கிராமத்தில் அதிகாலை பஸ் நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது.

அப்போது, பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற டபுள் டக்கர்(இரண்டடுக்கு கொண்ட) பஸ் என்ஜின் பழுது காரணமாக சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் 50 பயணிகளுடன் சென்ற சொகுசு பஸ், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சொகுசு பஸ்சில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆனது. மருத்துவமனையில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உத்தரப்பிரதேச சாலை விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.டுவிட்டர் பதிவில், 'இந்த விபத்து தனக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் கவலை தருவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியும் டுவீட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story