லிவிங் டூ கெதர் என்பது ஒரு ஆபத்தான நோய் - பாஜக எம்.பி., பேச்சால் சர்ச்சை


லிவிங் டூ கெதர் என்பது ஒரு ஆபத்தான நோய் - பாஜக எம்.பி., பேச்சால் சர்ச்சை
x

லிவிங் டூ கெதர் போன்ற நோய் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் முக்கிய கூட்டத்தொடர்களில் ஒன்று என்பதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வழக்கம்போல எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்பி வரும் நிலையில், பாஜகவும் பலவித திட்டங்களை வகுத்துள்ளது.

இந்நிலையில், மக்களவையில் இன்று பாஜக எம்பி தரம்பிர் சிங் லிவிங் டூ கெதர் உறவு குறித்து கேள்வி எழுப்பினார்.

தரம்பீர் சிங், லிவிங் டூ கெதர் உறவை ஒரு ஆபத்தான நோய் என்றும், அதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். லிவிங் டூ கெதர் போன்ற நோய் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் காதல் திருமணம் குறித்த கேள்விகளையும் எழுப்பினார். காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் விவாகரத்தில் முடிகிறது என்று கூறினார். எனவே திருமணம் போன்ற விஷயங்களில் மணமக்களின் பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றார்.

லிவிங் டூ கெதர் மற்றும் காதல் திருமணங்கள் குறித்து பாஜக எம்பி தரம்பீர் சிங் நாடாளுமன்றத்தில் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story