ஐதராபாத் விமான நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தை - வனத்துறை கூண்டில் சிக்கியது
விமான நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பொறி வைத்து பிடித்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து விமான நிலையத்தின் அருகே உள்ள மக்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் வைத்திருந்த கூண்டில் இன்று சிறுத்தை சிக்கியது. பொறியில் வைத்திருந்த ஆட்டை சாப்பிட முயன்றபோது சிறுத்தை கூண்டில் அகப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story