மைசூருவில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மைசூருவில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் வக்கீல் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து கோர்ட்டு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மைசூரு

மைசூரு மாவட்டம் உன்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷா. இவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வழக்கு சம்பந்தமாக உன்சூர் துணை போலீஸ் அலுவலகத்திற்கு ஆஷா சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் ஆஷாவை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பினர்.

இதுகுறித்து வக்கீல்கள் சங்கத்தினரிடம் ஆஷா கூறினார். இ்ந்தநிலையில் ஆஷாவை தகாத வார்த்தைகளால் திட்டிய உன்சூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரை கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் மைசூரு கோர்ட்டு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டகாரர்கள் கூறுகையில், வக்கீல் ஆஷாவை தகாத வார்த்தைகளால் திட்டிய துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி அவர்கள் 2 பேர் மீதும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார். இதனை ஏற்ற வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story