மணிப்பூர் நிலச்சரிவு 7 பேர் பலி; கடும் வேதனை அளிப்பதாக ராகுல் காந்தி டுவிட்


மணிப்பூர் நிலச்சரிவு 7 பேர் பலி; கடும் வேதனை அளிப்பதாக ராகுல் காந்தி டுவிட்
x

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் துபூல் ரெயில் நிலையம் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கினர். இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான 12-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த துயர சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story