ரயில்வே வேலை தொடர்பான நில மோசடி வழக்கு... சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் ஆஜர்
தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பார்தி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
புதுடெல்லி,
ரெயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வே துறையில் வேலை வழங்க நிலம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி, லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி மிசா பார்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
அந்த வகையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பார்தி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, புலனாய்வு அமைப்புகளுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், போராட கடினமாக இருந்தாலும் இதில் வெற்றி பெறுவோம் என்றார்.
Related Tags :
Next Story