'பிறக்கும்போதே டைமண்ட் ஸ்பூனுடன் பிறந்தவன் நான் - லலித் மோடி பதிலடி


பிறக்கும்போதே டைமண்ட் ஸ்பூனுடன் பிறந்தவன் நான் -  லலித் மோடி பதிலடி
x

லண்டன்,

தமிழில் கடந்த 1997-இல் வெளியான 'ரட்சகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுஷ்மிதா சென். அதிகளவில் இந்தி மொழி படங்களில் தான் இவர் நடித்துள்ளார். 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். 46 வயதாகும் இவர் இதுநாள் வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. சில தினங்கள் முன், நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்துவருவதாக செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், 58 வயதான ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடிக்கும், சுஷ்மிதா சென்னுக்கும் காதல் மலர்ந்துள்ளது. லலித்மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ''எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும்" என்று பகிர்ந்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் முறைகேட்டில் சிக்கிய லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். லலித் மோடியின் முதல் மனைவி உடல்நலக்குறைவால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், லலித் மோடி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில்,

''பிறக்கும் போதே டைமண்ட் ஸ்பூனுடன் பிறந்தவன் நான். 2005ஆம் ஆண்டில் எனது பிறந்தநாளான நவம்பர் 29ஆம் தேதியன்று பிசிசிஐயில் சேர்ந்தேன். நான் பிசிசிஐயில் சேர்ந்த போது அதன் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடிதான் இருந்தது. எனக்கு தடை விதித்தபோது பிசிசிஐ வங்கிக்கணக்கில் ரூ.47,680 கோடி இருந்தது என நினைக்கிறேன்.

நான் எவரிடமும் அரசு ரீதியிலான உதவி கேட்கவில்லை லஞ்சமும் வாங்கவில்லை. நான் தலைமறைவாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறீர்கள். எந்த நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று சொன்னது என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். இந்தியாவில் வணிகம் செய்வது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும்'' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story