புத்தூரில் முதியவரிடம் நகை திருடிய வழக்கில் தொழிலாளி சிக்கினார்


புத்தூரில்  முதியவரிடம் நகை திருடிய வழக்கில் தொழிலாளி சிக்கினார்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புத்தூரில் முதியவரிடம் நகை திருடிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

புத்தூரில் முதியவரிடம் நகை திருடிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

முதியவரிடம் நகை திருட்டு

தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி அருகே கோட்டை பகுதியை சேர்ந்தவா் கங்காதர் (வயது 60). இவர் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர், கங்காதரிடம் தங்க நகை அணிந்து ெசன்றால் மா்மநபர்கள் பறித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய கங்காதர் தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை கழற்றி அதை காகிதங்களில் மடக்கி பையில் வைத்திருந்தார். அப்போது அந்த நபர் கங்காதரின் பையில் இருந்த நகையை திருடிச் சென்றார். அவற்றின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கங்காதா் உப்பினங்கடி போலீசில் புகார் அளித்தார். அதன்போில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் நகையை திருடி சென்ற மர்மநபரை தேடி வந்தனர்.

தொழிலாளி கைது

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில் உப்பினங்குடி போலீசார் உப்பலா பகுதியை சேர்ந்த தொழிலாளி முகமது முஸ்தபா (வயது46) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், கங்காதரிடம் இருந்து 2 பவுன் நகையை திருடி சென்றதை முகமது ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 2 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முகமது, கடப்பா, மார்தலா ஆகிய பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், மத்திய அரசு திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தருவதாக விவசாயிகளிடம் இருந்து ரூ. 7 ஆயிரம் வரை ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதுகுறித்து முகமதுவிடம் உப்பினங்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story