குமரி டூ ஜோத்பூர்... விமானத்தில் பறந்த சினேரியஸ் கழுகு
சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாச்சியா உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
ராஜஸ்தான்,
கடந்த 2017-ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப் பள்ளத்தில் இருந்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட சினேரியஸ் கழுகை வனத்துறை அதிகாரிகள் மீட்டு உரிய சிகிச்சை அளித்தனர்.
அந்த பறவைக்கு ஒக்கி எனப் பெயரிட்டு, உதயகிரி உயிரியல் பூங்காவில் வைத்து வனத்துறை அலுவலர்கள் பராமரிது வந்தனர். இந்தியாவில் சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாச்சியா உயிரியல் பூங்காவில் உள்ள இயற்கை சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.
விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு அனுமதியுடன் அந்தப் பறவை, விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஜோத்பூக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story