பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்தால் குமாரசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு


பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்தால் குமாரசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் குமாரசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:-

சட்டசபை கூட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா 66 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவு 2 மாதங்கள் ஆகிவிட்டது. சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் பா.ஜனதா இதுவரை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலேயே சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதை ஆளும் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது விமர்சித்து வருகிறது. ஆனால் பா.ஜனதா எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை, சுனில்குமார், பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் இடையே போட்டி எழுந்துள்ளது.

அரசுக்கு நெருக்கடி

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) இணைந்தால், குமாரசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அவர் அரசுக்கு எதிரான தவறுகள், ஊழல்களை பகிரங்கப்படுத்தி நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார். அதனால் அவரையே எதிர்க்கட்சி தலைவராக ஆக்கினால், காங்கிரஸ் அரசை இக்கட்டான நிலையில் சிக்கவைக்க முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது.


Next Story