ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அரசு மீது பயம் இல்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அரசு மீது பயம் இல்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
x

ரோகிணி சிந்தூரி, ரூபா மோதல் விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அரசு மீது பயம் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ரோகிணி சிந்தூரி, ரூபா மோதல் விவகாரத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அரசு மீது பயம் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த அரசு செயல்படுகிறதா?

ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியும், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவும் மோதலில் ஈடுபட்டு வரும் விவகாரத்தை நானும் உன்னிப்பாக கவனித்தேன். அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வதன் மூலம் இந்த அரசு செயல்படுகிறதா?, இல்லையா? என்பதே தெரியவில்லை. அரசுக்கு கீழ் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வதை எப்படி எடுத்து கொள்வது. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக கையில் எடுக்க வேண்டியது அவசியம். தலைமை செயலாளருக்கு உரிய அதிகாரம் வழங்கி, 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை பார்க்கும் போது, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அரசு மீது பயம் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது. அதிகாரிகள் ஒன்றும் வானில் இருந்து வந்தவர்கள் இல்லை. அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்ளும் போது உள்துறை மந்திரி என்ன செய்து கொண்டிருக்கிறார்?.

முகத்தை காட்ட முடியவில்லை

சா.ரா.மகேஷ் விவகாரத்திற்கு பின்பு இந்த விவகாரம் பெரிதாகி இருக்கிறது. ரோகிணி சிந்தூரி சா.ரா.மகேசை சந்தித்து பேசி இருந்தார். இது எனது கவனத்திற்கும் வந்திருந்தது. சா.ரா.மகேசும் தெரிவித்திருந்தார். நான் கூட சரி விட்டு விடும்படியும், ஏதோ தப்பாகி விட்டது என்று தான் கூறி இருந்தேன். அப்படி இருந்தும் அந்த பெண் (ரோகிணி சிந்தூரி) எங்கு சென்றாலும், சர்ச்சை, பிரச்சினை தான்.

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பகிரங்க மோதல் காரணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையால் தனது முகத்தை வெளியே காட்ட முடியவில்லை. இந்த அரசால் அதிகாரிகளை நிலைப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story