கேரள கோவில்களில் அரளி பூக்கள் பயன்படுத்த தடை


கேரள கோவில்களில் அரளி பூக்கள் பயன்படுத்த தடை
x

அரளி பூக்களை பூஜைக்கு பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது.

கேரளா,

கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததை செல்போனில் உறவினருக்கு தெரிவித்து கொண்டிருந்தபோது, அரளி பூவை தெரியாமல் சாப்பிட்டு மரணம் அடைந்த சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்டத்தில் அரளி செடியை தற்செயலாக தின்ற ஒரு பசுவும் அதன் கன்றும் இறந்து போனது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் அரளி பூக்களை (ஒலியாண்டர்) பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அரளி பூக்களை பூஜைக்கு பயன்படுத்த தடை இல்லை என்றும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் 1,200க்கும் மேற்பட்ட கோவில்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story