கேரளாவில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் தொடக்கம் - அரசு பரிசீலனை


கேரளாவில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் தொடக்கம் - அரசு பரிசீலனை
x

கோப்புப்படம்

கேரளாவில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் வசதிக்காக கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து கேரள அரசு பரிசீலித்து வருவதாக சிறு துறைமுகங்கள் துறை மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'கேரளாவில் பேபூர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பேபூர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக 4,000 கி.மீ. தூரம் உள்ளது. 35 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ஒரு பயணிகள் கப்பல் பேபூரில் இருந்து துபாய்க்கு செல்ல 3½ நாட்கள் ஆகும். இதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வரும். ஆனால் விமானத்தில் செல்ல ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும்' என்றார்.


Next Story