கேரளா: பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திய உத்தரவு திடீர் ரத்து..!!


கேரளா: பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திய உத்தரவு திடீர் ரத்து..!!
x

கோப்புப்படம்

கேரளாவில் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் தவிர 122 பொதுத்துறை நிறுவனங்கள், 6 நிதிக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று ஓய்வு பெறும் வயதை 60 ஆக கேரள அரசு உயர்த்தியது.

இதனால் 1.50 லட்சம் ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் அரசின் இந்த முடிவு வேலையின்றி தவிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறியதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி வெளியான உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு நேற்று மறுஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story