கேரளா: லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து - 20 பேர் படுகாயம்


கேரளா: லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து - 20 பேர் படுகாயம்
x

ஆலப்புழா அருகே முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ,வயநாட்டில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மாலை திருவனந்தபுரத்திற்கு சென்றது. இந்த பஸ்சில் மானந்தவாடி பொழுதனா கிராம பஞ்சாயத்து தலைவர் அனஸ் ரோஸ் (வயது 27),பணமரம் வட்டார பஞ்சாயத்து தலைவர் கிரிஜா (50), மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் 5க்கு மேற்பட்டவர்கள் திருவனந்தபுரத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்தார்கள்.

இவர்கள் சென்ற பஸ் இன்று காலை ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சேர்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 20 பேரை மீட்டு சேர்த்தலா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story