நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு - கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் நர்சிங் படிப்பில் சேரும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் நர்சிங் படிப்பில் சேரும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
"இனி பிஎஸ்சி நர்சிங் மற்றும் ஜெனரல் நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படும். நர்சிங் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது (மாநிலத்தின்) வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கேரள அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாக நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு உள்ளது. செவிலியர் துறையிலும் திருநங்கைகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் இந்த இடஒதுக்கீடு திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.
Related Tags :
Next Story