தொடர் கனமழை: இடுக்கி அணையிலிருந்து நீர் திறப்பு - கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!


தொடர் கனமழை: இடுக்கி அணையிலிருந்து நீர் திறப்பு - கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
x

கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையின் ஒரு ஷட்டர் திறக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின.

இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைபெரியாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் முழுவதும் இடுக்கி அணைக்கு செல்கிறது. இதன் காரணமாக இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையின் ஒரு ஷட்டர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story