கேரளா: 10 லட்சம் பேருக்கு நோய் நிர்ணய பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது - மந்திரி வீணா ஜார்ஜ்
கேரளாவில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை வியாதிகளை கண்டறிய நோய் நிர்ணயம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 10 லட்சம் பேருக்கு வீடு தேடி சென்று அடிப்படை நோய் நிர்ணய பரிசோதனை நடத்தி இருப்பதாக கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மாநில சுகாதார துறையின் சுகாதாரம் உறுதி திட்டத்தின் கீழ் வீடு தேடி சென்று 10 லட்சம் பேருக்கு வாழ்க்கை நடைமுறை அடிப்படை வியாதிகளை கண்டறிய நோய் நிர்ணய பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு 2 மாதங்களுக்குள் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story