எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் வைத்தே வினாத்தாள் திருத்தப்பட்டதா?


எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில்  போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் வைத்தே   வினாத்தாள் திருத்தப்பட்டதா?
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் வைத்தே வினாத்தாள்கள் திருத்தப்பட்டதா? என்பது குறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் வைத்தே வினாத்தாள்கள் திருத்தப்பட்டதா? என்பது குறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கா்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) 545 பணிகளுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீஸ் அதிகாரிகள், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்றவர்களையும் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் போலீஸ் நியமன பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டராக பணியாற்றிய சாந்தகுமார் மற்றும் போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் வைத்தே வினாத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

வினாத்தாள்கள் திருத்தப்பட்டதாக...

அதாவது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதியவர்களின் வினாத்தாள்கள் போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த அறயைின் கதவை திறக்கும் சாவி துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாந்தகுமார் உள்பட 4 அதிகாரிகளின் வசம் இருந்ததாக தெரிகிறது. சாந்தகுமார் தன்னிடம் இருந்த சாவி மூலமாக பாதுகாப்பு அறையை திறந்து வினாத்தாள்களை எடுத்து, அதில் தேர்வு எழுதியவர்கள் காலியாக விட்டு இருந்த கேள்விகளுக்கு பதில் எழுதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பணம் கொடுத்தவர்களின் வினாத்தாள்களில் மட்டும் எழுதப்படாமல் இருந்த கேள்விகளுக்கு பதில் எழுதி தேர்ச்சி பெற செய்தாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story