காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது கிரிக்கெட் ஆடிய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
வாரணாசி,
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் விளையாட்டின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், விளையாட்டில் பங்கெடுக்க தவறுவதில்லை.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வீரர்களை வரவேற்ற மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி தனது பழைய நாட்களை நினைவுகூர்ந்தார். அனுராக் தாக்கூர் கிரிக்கெட் விளையாடும் படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அனுராக் தாக்கூர், "உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான உறவு மிகவும் பழமைவாய்ந்த ஒன்று. அது பிரதமர் மோடியால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் புத்துயிர் பெற்றுள்ளது. இரு மாநில கலாச்சாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.