மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரி நியமனம்; கர்நாடக அரசு


மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரி நியமனம்; கர்நாடக அரசு
x
தினத்தந்தி 10 Jun 2023 3:13 AM IST (Updated: 10 Jun 2023 2:07 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரிகளை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரிகளை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பெங்களூருவுக்கு டி.கே.சிவக்குமாரும், தட்சிணகன்னடா மாவட்டத்துக்கு தினேஷ் குண்டுராவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முதல்-மந்திரி சித்தராமையா

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா கடந்த மே மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். அவருடன் துணை முதல்-மந்திரியாக, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவக்குமார் பதவி ஏற்றார். அத்துடன் 8 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

அதைத்தொடர்ந்து மேலும் 24 மந்திரிகள் மே மாதம் 27-ந்தேதி பதவி ஏற்றனர். மந்திரிசபையில் ஒட்டுமொத்த இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கு கடந்த 29-ந்தேதி இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன. இதில் டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனம் ஆகிய இரு துறைகளும் ஒதுக்கப்பட்டது.

மாவட்ட பொறுப்பு மந்திரிகள்

இதையடுத்து அந்தந்த துறை மந்திரிகள் தங்களது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டனர். கர்நாடகத்தை பொறுத்தவரை மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரி நியமிக்கும் நடைமுறை உள்ளது. ஆனால் மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரி நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரிகளை நியமித்து கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதில் தனக்கு கோலார் வேண்டும் என்று கேட்ட உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பாவுக்கு பெங்களூரு புறநகர் மாவட்டமும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் சொந்த மாவட்டமான ராமநகருக்கு போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டியும், டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூருவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மந்திரி தினேஷ் குண்டுராவுக்கு தட்சிணகன்னடா மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

2 பேருக்கு பொறுப்பு வழங்கவில்லை

33 மந்திரிகள் இருக்கும் நிலையில் கர்நாடகத்தில் 31 மாவட்டங்கள் உள்ளது. இதனால் 2 மந்திரிகளுக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

அதாவது மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, ரகீம்கான் ஆகியோருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்படவில்லை. மாவட்டம் வாரியாக பொறுப்பு மந்திரிகள் நியமனம் குறித்த விவரம் வருமாறு:-

தினேஷ் குண்டுராவ்- தட்சிணகன்னடா

1. டி.கே.சிவக்குமார் - பெங்களூரு

2. பரமேஸ்வர் - துமகூரு

3. எச்.கே.பட்டீல் - கதக்

4. கே.எச்.முனியப்பா - பெங்களூரு புறநகர்

5. ராமலிங்கரெட்டி - ராமநகர்

6. கே.ஜே.ஜார்ஜ் - சிக்கமகளூரு

7. எம்.பி.பட்டீல் - விஜயாப்புரா

8. தினேஷ் குண்டுராவ் - தட்சிண கன்னடா

9. எச்.சி.மகாதேவப்பா - மைசூரு

10. சதீஸ் ஜார்கிகோளி - பெலகாவி

செலுவராயசாமி-மண்டியா

11. பிரியங்க் கார்கே - கலபுரகி

12. சிவானந்த பட்டீல் - ஹாவேரி

13. ஜமீர்அகமதுகான் - விஜயநகர்

14. சரணபசப்பா தர்சானப்பூர் - யாதகிரி

15. ஈஸ்வர் கன்ட்ரே - பீதர்

16. செலுவராயசாமி - மண்டியா

17. எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் - தாவணகெரே

18. சந்தோஷ்லாட் - தார்வார்

19. சரண பிரகாஷ் பட்டீல் - ராய்ச்சூர்

20. ஆர்.பி.திம்மாபூர் - பாகல்கோட்டை

லட்சுமி ஹெப்பால்கர்-உடுப்பி

21. வெங்கடேஷ் - சாம்ராஜ்நகர்

22. சிவராஜ் தங்கடகி - கொப்பல்

23. டி.சுதாகர் - சித்ரதுர்கா

24. நாகேந்திரா - பல்லாரி

25. கே.என்.ராஜண்ணா - ஹாசன்

26. பைரதி சுரேஷ் - கோலார்

27. லட்சுமி ஹெப்பால்கர் - உடுப்பி

28. மங்கல் வைத்தியா - உத்தர கன்னடா

29. மது பங்காரப்பா - சிவமொக்கா

30. எம்.சி.சுதாகர் - சிக்பள்ளாப்பூர்

31. என்.எஸ்.போசராஜ் - குடகு


Next Story