கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபையா..? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்


கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபையா..? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
x
தினத்தந்தி 11 May 2023 5:20 AM IST (Updated: 11 May 2023 11:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் என காட்டுகின்றன.

புதுடெல்லி,

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு ஆளும் பா.ஜ.க.வும், ஆட்சியைப் பிடிப்பதற்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் கடும் முயற்சியில் ஈடுபட்டன. தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் ஆட்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டியது.

நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

தொங்கு சட்டசபை

வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பினை பல்வேறு நிறுவனங்கள் நடத்தி அதன் முடிவை வெளியிட்டன.

மொத்தம் உள்ள 224 இடங்களில் 113 இடங்களை பிடித்தால் மட்டுமே தனிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் அங்கு எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் என்றும், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் கூறுகின்றன.

அதன் விவரம் வருமாறு:-

ஜன்கி பாத்-ஏசியாநெட்

பா.ஜ.க. 94-117

காங்கிரஸ் 91-106

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 14-24

மற்றவர்கள் 0-2

ஜி நியூஸ்- மாட்ரிஸ்

காங்கிரஸ் 103-118

பா.ஜ.க. 79-94

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 25-33

மற்றவவை 2-5

ரிபப்ளிக் டி.வி.- பிமார்க்

காங்கிரஸ் 94-108

பா.ஜ.க. 85-100

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 24-32

மற்றவை 2-6

ஏபிபி- சி வோட்டர்

காங்கிரஸ் 100-112

பா.ஜ.க. 83-95

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 21-29

மற்றவை 2-6

டிவி9 பாரத் வர்ஷ்- போல் ஸ்டிராட்

காங்கிரஸ் 99-109

பா.ஜ.க. 88-98

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 21-26

மற்றவை 0-4

பீப்பிள்ஸ் பல்ஸ்

காங்கிரஸ் 107-119

பா.ஜ.க. 78-90

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 23-29

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா

காங்கிரஸ் 122-140

பா.ஜ.க. 52-80

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 20-25

மற்றவை 0-3

டைம்ஸ் நவ்-இ.டி.ஜி.

காங்கிரஸ் 113

பா.ஜ.க. 85

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 23

மற்றவை 3

இந்தியா டி.வி.- சிஎன்எக்ஸ்

காங்கிரஸ் 110-120

பா.ஜ.க. 80-90

மதச்சார்பற்ற

ஜனதாதளம் 20-24

ஓட்டு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் (சனிக்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று மாலை அங்கு ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என தெரியவரும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலித்துள்ளனவா என்பதுவும் அப்போது தெரிய வரும்.


Next Story