காங்கிரஸ் அரசு அமைந்ததை தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


காங்கிரஸ் அரசு அமைந்ததை தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில்  கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜனதா 66 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு, 4 நாட்கள் பிறகு சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்திருந்தது.

மேலும் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி 20-ந் தேதி பதவி ஏற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 8 மந்திரிகளும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டு இருந்தனர்.

அதைத்தொடர்ந்து, நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் 5 இலவச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததுடன், கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இதையடுத்து, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் சட்டசபை கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடககாங்கிரஸ் ஆட்சி அமைந்ததை தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.ட்டசபை நாளை கூடுகிறது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே தலைமையில் நாளை சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.


Next Story