23-வது கார்கில் வெற்றி தினம் - லடாக்கில் சிறப்பான கொண்டாட்டம்!
கார்கில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற கார்கில் போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர். ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் கார்கில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, 23-வது கார்கில் வெற்றி விழாவை லடாக்கில் பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து லடாக்கில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 24-க்கு மேற்பட்ட மாணவர்கள் கார்கில் வெற்றியை நினைவுபடுத்தும் ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
கலை படைப்புகளை வரைந்த மாணவர்களுக்கு லடாக் பகுதியின் ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சென்குப்தா பாராட்டு தெரிவித்தார். மேலும், கார்கில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதியை 'கார்கில் வெற்றி தினம்' என்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்படும். அந்த நாளில் நமக்காக எல்லையில் பணியாற்றும் வீரர்களை நினைவுகூர்வோம்.