கார்கில் வெற்றி தினம் - காஷ்மீர் கவர்னர் மரியாதை
கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா அஞ்சலி செலுத்தினார்.
லடாக்கின்,கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இந்தியப் பகுதியில் உள்ள மலை உச்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படைகளை எதிர்த்து போரிட்டு 1999 ஜூலை 26-ல் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும், கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது
விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது,
நமது மகத்தான தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க தங்கள் இறுதி மூச்சு வரை போராடி, கார்கிலில் நமது தாய்நாட்டின் நிலப்பரப்பை எதிரிகளிடமிருந்து மீட்டெடுத்த நமது மாவீரர்களின் வீரத்திற்கும், தைரியத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்.
1999 ஆம் ஆண்டு ஜூலை 26 -ம் தேதி, நாட்டின் வலிமையை வெளிப்படுத்திய நமது வீரர்களின் துணிச்சலை உலகம் முழுவதும் கண்டது.
வீரர்களின் சுய தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். வீரர்கள் குடும்பத்தினரின் தளராத துணிச்சலுக்கும் நான் தலை வணங்குகிறேன்" என்று கூறினார்.