ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக தாஷி ரப்ஸ்தான் நியமனம்


ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக தாஷி ரப்ஸ்தான் நியமனம்
x

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக, தாஷி ரப்ஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக, தாஷி ரப்ஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்கிறார். நீதிபதி அலி முகமது மாக்ரே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி தாஷி ரப்ஸ்தானை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமித்து இந்திய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய அரசியலமைப்பின் 223-வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி, அலி முகமது மாக்ரே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து 08.12.2022 முதல் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக தாஷி ரப்ஸ்தானை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story