சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி யார்..? - மத்திய அரசு கடிதம்!
அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக, சட்டத்துறை மந்திரியிடமிருந்து இன்று காலை தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அவரை தொடர்ந்து அடுத்தபடியாக, சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story