சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் டி.ஒய்.சந்திர சூட்...!


சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் டி.ஒய்.சந்திர சூட்...!
x
தினத்தந்தி 9 Nov 2022 10:32 AM IST (Updated: 9 Nov 2022 12:25 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதுடெல்லி,

நேற்று ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ந்தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

1959-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பிறந்தவரான சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டு மே 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார். அவர் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை பொறுப்பு வகிப்பார்.

புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ஆவார். மிக நீண்டகாலம் இப்பதவியை அலங்கரித்தவர் என்ற பெருமை பெற்ற அவர், 1978-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல், 1985-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி வரை இந்த உச்ச பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story