ஜார்கண்ட் நக்சல் இயக்கத்தின் முக்கிய தளபதியான தினேஷ் கோப் கைது - என்.ஐ.ஏ. நடவடிக்கை


ஜார்கண்ட் நக்சல் இயக்கத்தின் முக்கிய தளபதியான தினேஷ் கோப் கைது - என்.ஐ.ஏ. நடவடிக்கை
x

Image Courtesy : ANI

தினேஷ் கோப் கைது செய்யப்பட்டது பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

புதுடெல்லி,

ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் கோப் என்ற குல்தீப் யாதவ். நக்சலைட்டு தளபதியாக தன்னைத்தானே அறிவித்து செயல்பட்டு வந்த இவர் மீது ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வரும் தினேஷ் கோப்பை பிடிக்க இந்த மாநிலங்களின் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வந்தன. அத்துடன் அவரது தலைக்கு ரூ.30 லட்சம் பரிசும் அறிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தினேஷ் கோப், டெல்லியில் பதுங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது மறைவிடத்தை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். ஜார்கண்ட் நக்சலைட்டு இயக்கத்தின் முக்கிய தளபதியான தினேஷ் கோப் கைது செய்யப்பட்டது பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.


Next Story