சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல் -மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்


சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல் -மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்
x

நிலமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாக கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதையடுத்து அவர் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் தரப்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ரோங்கோன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதற்கு முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலின் போது பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story