பா.ஜ.க.- ஜனதாதளம்(எஸ்) கூட்டணி பற்றி நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதி முடிவு; பசவராஜ்பொம்மை சொல்கிறார்
பா.ஜ.க.- ஜனதாதளம்(எஸ்) கூட்டணி பற்றி நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதி முடிவு செய்யப்படும் என்று பசவராஜ்பொம்மை கூறினார்.
பல்லாரி:
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
குமாரசாமி நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் கூட்டணி குறித்து நீண்ட விவாதம் நடைபெறும். அதன்பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். சித்தராமையா காங்கிரஸ் தலைவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார். 2013-ம் ஆண்டு அவர் ஆட்சி செய்த விதம் வேறு. தற்போது அவரது ஆட்சி நிர்வாகம் வேறுமாதிரியாக உள்ளது. சில காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவால் சித்தராமையா பதவியில் உள்ளார்.
ஹரிபிரசாத்துக்கும் தலைவர்களின் ஆதரவு உள்ளது. இதனால் அவர் மறைமுகமாக சித்தராமையாவை எதிர்த்து வருகிறார். இதன் மூலம் சித்தராமையா தற்போது அழுத்தத்திற்கு அடிபணிந்து ஆட்சி செய்வதை காட்டுகிறது. ஒருபக்கம் உட்கட்சி பூசலாலும், மற்றொருபுறம் ஊழல், முறைகேட்டாலும் சித்தராமையா சிக்கி தவிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.