இந்திய ரெயில்வேயின் தலைமை நிர்வாகியாக ஜெய வர்மா சின்ஹா நியமனம்
இந்த உயர்ந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மணி ஜெய வர்மா சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
இந்திய ரெயில்வேயின் தலைமை நிர்வாகி அனில் குமார் லஹோட்டி விரைவில் ஓய்வு பெறுகிறார் . இவருக்கு அடுத்து இந்த பதவிக்கான அதிகாரி நியமனம் குறித்து தேர்வு நடைபெற்று வந்தது. இந்திய ரெயில்வேயின் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த இந்த பதவிக்கு ஜெய வர்ம சின்ஹா என்பவரை இந்திய அரசாங்கம் தேர்வு செய்து நியமித்துள்ளது.
இந்த உயர்ந்த பதவியை ஏற்கும் முதல் பெண்மணி ஜெய வர்ம சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. "இந்திய ரெயில்வேயின் செயலாக்கம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜெய வர்ம சின்ஹா, இந்திய ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அரசாங்கத்தின் நியமனங்களுக்கான கேபினெட் கமிட்டியும் உறுதி செய்துள்ளது" என இது குறித்து அரசு அறிவித்திருக்கிறது.
1988-ல் இந்திய ரெயில்வே டிராபிக் சேவையில் சேர்ந்த ஜெய வர்மா அலகாபாத் பல்கலைகழகத்தில் பயின்றவர். வடக்கு ரெயில்வே, தென்கிழக்கு ரெயில்வே மற்றும் கிழக்கு ரெயில்வே ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் உள்ள இவர் இந்தியாவின் அண்டை நாடான வங்களாதேசத்தின் ரெயில்வே சேவைக்கு ஆலோசகராகவும் பணி புரிந்தார்.