இமாச்சல பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு


இமாச்சல பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு
x

அனைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.

சிம்லா:

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியது. இதையடுத்து முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் இன்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தைத் தொடர்ந்து ஜெய்ராம் தாக்கூர், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில், ஜெய்ராம் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. குடும்பத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுவது எங்களின் முதன்மைப் பொறுப்பு. சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய அனைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.


Next Story