ஜகதீப் தன்கர், தேவேகவுடா பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து


PM Modi Birthday Wishes
x

ஜகதீப் தன்கர் மற்றும் தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டத்துறையில் அவருக்கு இருக்கும் வளமான அனுபவத்தால், அரசியலமைப்பு குறித்த ஆழமான புரிதலைக் கொண்டவர். பொதுசேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் எப்போதும் நமது குடிமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக உழைக்கிறார். அவரது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அதே போல், இன்று தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவுக்கும் பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "தேவேகவுடாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்திற்கு அவர் செய்த சேவைகளுக்காக அரசியல் களத்தில் மிகவும் மதிக்கப்படுகிறார். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டின் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story