அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மணிஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்-மந்திரி கண்டனம்
டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
keதிருவனந்தபுரம்,
டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) நேற்று கைது செய்தது. முன்னதாக அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மணிஷ் சிசோடியா, இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரின்
சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது நீதிமன்றம்.
இதனிடையே மணிஷ் சிசோடியா கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்த்தை ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். அதுபோல, பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தையும் ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டு கண்டனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்திருப்பது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக, மத்திய அரசின் அமைப்புகளை பாஜக எப்படி தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என பதிவிட்டுள்ளார்.