கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணித்ததாக தகவல்


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்  1,257 பேர் முன்பதிவு செய்து பயணித்ததாக தகவல்
x

(PTI Photo)

தினத்தந்தி 3 Jun 2023 3:21 PM IST (Updated: 3 Jun 2023 5:55 PM IST)
t-max-icont-min-icon

விபத்துக்குள்ளான இரு ரெயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. இதில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேரும், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,039 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story