காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடக மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல - எடியூரப்பா ஆவேசம்
காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட நிலையில் கர்நாடக மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல என்று எடியூரப்பா ஆவேசமாக கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு இன்று(நேற்று) உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடகம் மீது எழுதப்பட்ட மரண சாசனம். தமிழகத்திற்கு மேலும் காவிரி நீரை திறந்தால் அது கர்நாடகத்தின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும். கர்நாடக அரசின் அலட்சிய போக்கால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சிக்கு மத்தியிலும் தமிழகத்திற்கு ஏற்கனவே கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையை காங்கிரஸ் அரசு இழந்துவிட்டது. காங்கிரஸ் அரசு மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல.
இவ்வாறு எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story