இஸ்ரோவின் என்.ஜி.எல்.வி. ராக்கெட் தயாரிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இஸ்ரோவின் என்.ஜி.எல்.வி. ராக்கெட் தயாரிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

இஸ்ரோவின் என்.ஜி.எல்.வி. ராக்கெட் தயாரிப்புக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'சந்திரயான்-4' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த வகையில் பகுதியளவில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை என்.ஜி.எல்.வி. ராக்கெட் தயாரிப்புக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது இஸ்ரோவின் எல்.வி.எம்.-3 ராக்கெட்டை விட 3 மடங்கு அதிக எடை தாங்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.8,240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி மையத்தை 2040-ம் ஆண்டுக்குள் உருவாக்குவதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்பட்டுள்ளது.

என்.ஜி.எல்.வி. ராக்கெட் தயாரிப்பு திட்டத்தின் வளர்ச்சி கட்டத்தை நிறைவு செய்ய அரசு 96 மாதங்கள் (8 ஆண்டுகள்) இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story