ராஜராஜ சோழன் இந்து அல்ல என்பதா? காங்கிரஸ் கண்டனம்


ராஜராஜ சோழன் இந்து அல்ல என்பதா? காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 8 Oct 2022 4:30 AM IST (Updated: 8 Oct 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்ைச பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இந்து அல்ல என்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.

புதுடெல்லி,

தஞ்ைச பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இந்து அல்ல என்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் ஆதரவு தெரிவித்து இருந்தார். இது சர்ச்ைசயை கிளப்பி இருக்கிறது. இந்த கருத்துகள் முட்டாள்தனமானவை என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கரண் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'சிவன் ஆதி இந்து கடவுள், ஸ்ரீநகரில் இருந்து ராமேஸ்வரம் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்களின் தீவிர பக்தியின் மையமாக உள்ளது. கட்டிடக்கலையின் அற்புதம் நிறைந்த மிகப்பெரிய சிவன் கோவில்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவிலை ராஜராஜன் தஞ்சாவூரில் கட்டியுள்ளார். அங்கு நான் பலமுறை சென்று வணங்கியுள்ளேன்' என்று தெரிவித்தார்.

ராஜராஜ ேசாழன் இந்து இல்லை, சைவ மதத்தை சேர்ந்தவர் என்று சொல்வது, ஒருவர் கத்தோலிக்கர் ஆனால் கிறிஸ்தவர் அல்ல என்று சொல்வது போன்றது எனவும் கரண் சிங் கூறியுள்ளார். நமது மதத்தை குழப்பும் இதுபோன்ற கருத்துகள் ஏற்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story