நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அமலாக்கத்துறையிடம் இருந்து அழைப்பு வருவது சரியா? -எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே
இந்த விவகாரம் குறித்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி,
அமலாக்கத்துறை விசாரணையில், வேண்டுமென்றே பல எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இன்று மாநிலங்களவையில் அரசிடம் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறுகையில், "எனக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து சம்மன் வந்தது. அவர்கள் என்னை மதியம் 12.30 மணிக்கு அழைத்தனர். நான் சட்டத்தை கடைபிடிக்க விரும்புகிறேன்.
ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது அவர்கள் அழைப்பது சரியா? சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் இல்லங்களில் காவல்துறை வெளியேறவிடாமல் தடுப்பது சரியா?
இவற்றுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம், தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
Related Tags :
Next Story