2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்


2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்
x

கோப்புப்படம்

2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், "2020-2021 கொரோனா காலத்தினை ஒப்பிடும்போது 2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது.

2019-2020ஆம் ஆண்டில் இந்திய ரெயில்வே வருவாய் ரூ.2342.41 கோடியாக இருந்தநிலையில், 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.864.64 கோடியாக குறைந்திருந்து.

2021-2022 ஆம் ஆண்டில் மீண்டும் இந்திய ரெயில்வேயின் வருவாய் ரூ.1952.30 கோடியாக அதிகரித்துள்ளது. ரெயில்களில் மீண்டும் உணவு சமைத்து பரிமாறப்படுவது உள்ளிட்ட வழக்கமான பணிகள் தொடங்கியதால் வருவாய் அதிகரித்துள்ளது.

இந்திய ரெயில்வேயின் இணையதளத்தை 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.3052.67 லட்சம் பயனாளர்கள் பயன்படுத்துயுள்ளநிலையில், 2021-2022ஆம் ஆண்டில் ரூ.7343.26 லட்சம் பயனாளர்களாக அதிகரித்துள்ளது. 2022-2023 ஆம் நிதியாண்டில் அக்டோபர் 31-ஆம் தேதிவரை ரூ.4607.63 லட்சம் பயனாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்" என்று அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


Next Story